அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை நவம்பர் 14 வரை ரத்து
அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இன்று முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலின் செயற்பாடுகளுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.