Breaking News

நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழையினால் 159,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது



நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.வௌ்ள அனர்த்தங்களால் 159,511 பேர் பாதிப்பு - இடர்முகாமைத்துவ நிலையம்


40,758 குடும்பங்களை சேர்ந்த 159,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2,433 குடும்பங்களைச் சேர்ந்த 10,361 பேர் 80 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வீடு முழுமையாகவும் 370 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தரவுகள் பதிவாகியுள்ளன.

ஏற்பட்ட அனர்த்தங்களின் காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்தங்களால் கம்பஹா மாவட்டத்தில் 20,553 குடும்பங்களைச் சேர்ந்த 82,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.