வீதி விபத்துகளால் 24 மணி நேரத்தில் 4 பேர் பலி.
மொரோந்துடுவ, கோப்பாய், கரந்தெனிய மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொரோந்துடுவ - ஹொரண வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கல்வெட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் 21 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். பலத்த காயங்களுக்கு உள்ளான அவர், கொனடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், கட்டப்பிறையைச் சேர்ந்த 68 வயதுடைய பாதசாரி ஒருவர் மீது முச்சக்கரவண்டி மோதியதில் பலத்த காயமடைந்து யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொரகந்தவில், மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் 81 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கண்டி - கொழும்பு பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் கடவத்தையைச் சேர்ந்த 74 வயதுடைய நபர் ஒருவர் வாகனத்தின் பின் சக்கரத்தின் கீழ் விழுந்து நசுங்கி உயிரிழந்துள்ளார்.