Breaking News

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீயினால் உயிரிழந்தனர்.

 




சிலாபம், சிங்கபுர பிரதேசத்தில் வீடொன்று தீப்பிடித்ததில் 15 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


நேற்றிரவு (19) இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்த தாய், தந்தை மற்றும் அவர்களது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவர்கள் 42 வயதுடைய ஆண், 40 வயதுடைய பெண் மற்றும் அவர்களது மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.