அலி சாஹிர் மௌலானா அவர்களால் காத்தான்குடி ஹிழுரியா வித்தியாலயத்திற்கு 50 இலட்சம் நிதி ...
முன்னாள் அமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முந்திய இறுதி 3 மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பு செய்வதற்காக நிதிகளை பெற்று பகிர்ந்து இருந்தார்கள் -
அவைகள் தற்போது அவர் பதவிகளிலும் , பதவிக்கான வேட்பாளர் போட்டியிலும் இல்லாத நிலையில் குறித்த செயற்திட்ட பணிகளுக்காக கிடைக்கப்பெற்று வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன ,
அந்த வகையில் காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு பாடசாலைகள் , வீதிகள் , பள்ளிவாசல்கள் , சமூக சமய அமைப்புக்கள் , விளையாட்டு கழகங்கள் , பாலர் பாடசாலைகள் என வழங்கப்பட்டது .
காத்தான்குடி அல் ஹிரா வித்தியாலயத்திற்கு 50 இலட்சம் வழங்கப்பட்டு அதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சூழலில் இன்னும் ஒரு பாடசாலையான காத்தான்குடி ஹிழுரியா வித்தியாலயத்திற்கு புதிய வகுப்பறை கட்டடம் அமைப்பதற்காக 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டு உள்ளன.
பாடசாலையின் அதிபர் யாசிர் அரபாத் தலைமையிலான நிருவாக குழுவினரின் பங்கேற்புடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.