பொலீஸ் திணைக்களத்தின் குற்றப்பிரிவு பணிப்பாளராக ஷானி
சிஐடியின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஷானி அபேசேகர இலங்கை பொலீஸ் திணைக்களத்தின் குற்றப்பிரிவு பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபரின் பரிந்துரையின் பேரில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவை எஸ்.எஸ்.பி அபேசேகரவின் நியமனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் இதுவரை இடம்பெற்ற அனைத்து குற்றச் செயல்களையும் ஆராய்ந்து குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்துவது புதிய குற்றப்பிரிவு பணிப்பாளரின் பொறுப்பாகும் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-Dailymirror
Post Comment