மஜ்மா நகரில் புதிய பள்ளிவாயல் திறப்பு
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிரல் மஜ்மா நகர் மேற்கில் நிர்மாணிக்கப்பட்ட புதிய ஜும் ஆப் பள்ளிவாயல் நேற்று வெள்ளிக்கிழமை ஜும் ஆத் தொழுகையுடன் பொது மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
செம்மண்ணோடையைச்சேர்ந்த மௌலவி எம்.ஏ.எம்.றிஸ்வான் நஹ்ஜியின் முயற்சியில் துபாய் நாட்டை சேர்ந்த தனவந்தர் ஆரப் அப்துல்லாஹ் நாஸர் என்பவரின் முழு நிதிப்பங்களிப்பில் குறித்த பள்ளிவாயல் நிர்மானிக்கப்பட்டு திற்ந்து வைக்கப்பட்டது.
எஸ்.ஏ.பர்ஹான் மெளலவியின் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வின் போது குத்பா பிரசங்கத்தை மௌலவி ஏ.எல்.அஜ்மீர் நஹ்ஜி நிகழ்த்தினார்.
குறித்த பள்ளிவாயலை தனது சொந்த நிதியிலிருந்து நிர்மாணித்து வழங்கிய தனவந்தர் துபாய் நாட்டைச்சேர்ந்த தனவந்தர் ஆரப் அப்துல்லாஹ் நாஸர் அவர்களுக்கும் இதற்கு உதவி, ஒத்தாசை வழங்கிய எம்.ஏ.எம்.றிஸ்வான் நஹ்ஜி, எஸ்.ஏ.பர்ஹான் மெளலவி மற்றும் பிரதேச பொதுமக்கள் மற்றும் உதவி, ஒத்தாசை புரிந்த அனைவரும் மஜ்மா நகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ஏ.எல்.சமீம் நன்றிகளைத் தெரிவித்தார்