Breaking News

தீபாவளி முன்னிட்டு பாடசாலை விடுமுறை தொடர்பான தகவல்.



மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி அரசாங்கப் பாடசாலைகளுக்கும் நவம்பர் 01ஆம் திகதி பாடசாலை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (ஒக்டோபர் 31) கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மற்றும் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுமுறை காரணமாக விடுபட்ட கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி சனிக்கிழமையன்று வழங்கப்படும் என மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மேலும் அறிவித்துள்ளனர்.