இந்திய கிரிக்கெட் வீரர் டிஎஸ்பி ஆக நியமனம்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தெலுங்கானாவின் துணைக் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டார்.
தெலுங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரி20 உலகக் கிண்ண வெற்றி உட்பட இந்திய அணிக்கு அவர் ஆற்றிய சேவைக்காக சிராஜுக்கு குரூப்-1 அரசு பதவி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அந்தவகையில், நேற்று முன்தினம் (11) தெலுங்கானாவின் துணைக் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) முறைப்படி பொறுப்பேற்றார்.