Breaking News

அறுகம்பே பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இதுவரை மூவர் கைது.




அறுகம்பே பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“விசாரணையின் அடிப்படையில் இந்தத் தகவலின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தெரிந்தோ தெரியாமலோ தொடர்பு இருக்கிறதா என்றும் ஏதாவது குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார்களா என்றும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. “