Breaking News

இலங்கையின் புதிய கடவுச்சீட்டில் உள்ளடங்கியுள்ள சுவாரஷ்யமான சில தகவல்கள்.





இலங்கையில் 2024.10.21 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கடவுச்சீட்டுக்களின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் கடவுச் சீட்டானது இராஜ தந்திர கடவுச்சீட்டு, உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு மற்றும் சாதாரண கடவுச்சீட்டுக்கள் என்று 03 வெவ்வேறு வர்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் சாதாரண கடவுச்சீட்டு கருமை நிறம் புலப்படக்கூடிய வகையில் கருநீல நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டில் பின்வரும் அம்சங்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் புற ஊதாக் கதிர்களில் ஒளிரக்கூடிய வகையில் அச்சிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


4-5 ஆம் பக்கம்: ஸ்ரீ தலதாமாளிகை

6-7 ஆம் பக்கம்: நல்லூர் கந்தசுவாமி கோவில்

08 ஆம் பக்கம்: கொழும்பு புனித லூசியா தேவாலயம்

09 ஆம் பக்கம்: கொழும்பு பெரிய பள்ளிவாசல்

 10-11 மீ பக்கம்: அம்பாறை சேனாநாயக்க சமுத்திரம்

 12-13 ஆம் பக்கம்: அனுரதபுர ரூவன்வெலிசாய மகா விகாரை

 14-15 ஆம் பக்கம்: பதுளை ஒன்பது வில் பாலம்

 16-17 ஆம் பக்கம்: மட்டக்களப்பு வாவி

 18-19 ஆம் பக்கம்: கொழும்பு தாமரைக் கோபுரம்

 20-21 ஆம் பக்கம்: காலி கோட்டை

 22-23 ஆம் பக்கம்: கம்பஹா இறப்பர் தோட்டம்

 24-25 ஆம் பக்கம்: ஹம்பாந்தோட்டை உப்பளம்

 26-27 ஆம் பக்கம்: களுத்துறை STILT மீனவர்கள்

 28 மீ பக்கம்: பின்னவல யானைகள் சரணாலயம்

 29 ஆம் பக்கம்: பக்கத்தில் கிளிநொச்சி அடையாளமாக இலங்கை சாம்பல் இருவாச்சி பறவை

 30 ஆம் பக்கம்: குருநாகல் யாப்பஹுவ குன்றுகள்

 31 ஆம் பக்கம்: தலைமன்னார் படகுத்துறை

 32-33 ஆம் பக்கம்: சிகிரியா குன்று

 34 ஆம் பக்கம்: மாத்தறை வெளிச்சவீடு

 35 ஆம் பக்கம்: யால தேசிய பூங்கா

 36 ஆம் பக்கம்: முல்லைத்தீவு கொக்கிலாய் பறவைகள் சரணாலயம்

 37 ஆம் பக்கம்: நுவரெலியா தேயிலை தோட்டம்

 38-39 மீ பக்கத்தில் பொலனறுவை பழமை நகரம்

 40-41 மீ பக்கம்: புத்தளம் டொல்பின் காட்சிக் காணல்

 42-43 ஆம் பக்கம்: சிவனொளிபாதமலை

 44 ஆம் பக்கம்: திருகோணமலை புறாத்தீவு

 45 ஆம் பக்கம்: வவுனியா அரிசி அறுவடை என்பன அச்சிடப்பட்டுள்ளன