வாகன வருமான உரிமம் தொடர்பாக : அரசிடமிருந்து புதிய உத்தரவு.
இவ்வாறான முறைமைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், இந்த சேவை அதிகம் தேவைப்படும் மேல் மாகாணத்திற்கு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் உள்ள ஒருவரின் வாகனம் முன்னர் வேறு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால், குறித்த மாகாணத்தில் இருந்து வருமான அனுமதிப் பத்திரத்தைப் பெறுவது மிகவும் கடினமானதாகவும், நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கும் ஒன்றாகவும் பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இப்பிரச்சினைக்கு தீர்வுகாண மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு அமைச்சர் விஜித ஹேரத் மேல்மாகாண ஆளுநருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.