களனி பல்கலைக்கழகத்தின் விடுதி கட்டடத்திலிருந்து தவறி வீழ்ந்து மாணவரொருவர் பலி.
கந்தேகம ரிதிமாலியந்த பகுதியைச் சேர்ந்த 24 வயதான மாணவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களனி பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.