"SJB தேசிய பட்டியலில் மீதமுள்ள 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமைக்குள் பெயரிடப்படுவார்கள்"
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் எஞ்சிய நான்கு ஆசனங்களுக்குத் தகுதியான வேட்பாளர்களின் பெயர்கள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி கடந்த பொதுத் தேர்தலில் 05 தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளை வென்றதுடன் இதுவரை ஒரு எம்.பி பதவியே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் எம்.பி.ரஞ்சித் மத்தும பண்டார, எஞ்சியுள்ள தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளுக்கு உரிய நேரத்தில் கட்சி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.