காத்தான்குடியில் 7வது மாபெரும் இரத்ததான முகாம்
(நிருபர் - Noordeen MSM)
காத்தான்குடி இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான அமைப்பின் ஏற்பாட்டில், 7வது மாபெரும் இரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை (24) ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் எம்.ஏ. நெளஸாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர் அலிமா ரஹ்மான் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.
குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்குடன், காலை 9 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்வில், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இரத்ததானத்தில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
(