Breaking News

ஏன் இந்த மீன்கள் கரையொதுங்கியது






கிளாத்தி மீன்கள் இவை பலவீனமான நீச்சல் திறனுள்ளவை., நீரோட்டங்கள் மற்றும் வானிலை மாற்றங்களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப் படுகின்றன.

உங்களை இந்த மீன் கடித்தால் வலி மற்றும் ஆபத்தான தொற்றுக்கு வழிவகுக்கும். நீங்கள் மருத்துவ உதவியை நாட வேண்டும்
(கடல் ஆல்காவில் காணப்படும் Ciguatoxin காரணமாக)

ஆனால் இவை நீரோட்டத்திற்கு எதிராக நீந்துவதில் பலவீனமானவை . சமீபத்தில் ஏதேனும் பெரிய புயல்கள், வானிலை மாற்றங்கள் அல்லது கடல் நீரோட்டங்கள் (water current) ஏற்பட்டதால்தான் இவை இலங்கையின் கிழக்கு கடற்கரைகளில் கரையொதுங்கி மீண்டும் அலைகளை எதிர்த்து நீந்தி அவற்றின் வாழிடங்களான பவளப்பாறைகளை (coral reef) அடைய முடியாமலேயே கரைகளில் இறக்கின்றன..

நான் ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் 01.11.2024 இன்று அவதானித்தேன்., வானிலை மிகவும் கடினமானதாக இருக்கும்போது, ​​சாதாரணமாக அமைதியான பாறைக் குவியல்களிலிருந்து இந்த கிளாத்தி மீன்கள் அலைகளை எதிர்த்துப் போராட முடியாது, கடற்கரையில் தூக்கி எறியப்படுகின்றன.

ஊடகங்களில் கடல் துறை சார்ந்த அதிகாரிகள் கள ஆய்வு இன்றி பிழையான தகவல்களை வழங்கியுள்ளதை அவதானித்த பின்பே இதை பற்றி எழுதுகிறேன்.

இவை இறந்து கரையொதுங்கினால் உயிரியல் ,கடல் நீரில் இரசாயன, வெப்ப மாற்றம், எனலாம். ஆனால் இந்த மீன்கள் புன்னகுடாவில் கரையொதுங்கிய பின்னரே இறக்கின்றன.


M.T.Nabris khan (Bsc)
(spcl in Fisheries- Ruhuna University, Faculty of Fisheries and marine sciences & technology)
Bt/Bc/Al-juffriya vid. Eravur