பதுளை விபத்தில் உயிரிழந்த கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் இறுதிக் கிரியைகள் இன்று
பதுளை - மஹியங்கனை வீதியில் அம்பகஹஓய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவிகள் இருவரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.
அவர்களது உடல்கள் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உயிரிழந்த மாணவர்களின் இறுதிக் கிரியைகள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பூரண அனுசரணையில் இடம்பெற்று வருகின்றன.
உயிரிழந்த மாணவிகளில் ஒருவர் நிவிதிகல பிரதேசத்தை வசிப்பிடமாகவும், மற்றைய மாணவி குருநாகலை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார்.
கிடைத்த தகவலின்படி, பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த 39 பேர் பதுளை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் எவருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.