கல்முனை மற்றும் சாய்ந்தமருதில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த கடல் முகத்துவாரங்கள் திறக்கப்பட்டன
நேற்று அதிகாலை தொடக்கம் பெய்து வந்த தொடர் மழையால் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டது. இதை கட்டுப்படுத்த, கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் சாய்ந்தமருது, கல்முனை மற்றும் பெரிய நீலாவணை பகுதிகளில் உள்ள கடல் முகத்துவாரங்கள் தோண்டப்பட்டன. இந்த நடவடிக்கையால் வெள்ள நீர் கடலுக்குள் செலுத்தப்பட்டது.
காற்றினால் முறிந்து விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டன, மேலும் போக்குவரத்து தடைகள் மற்றும் அபாய நிலைகள் நிவர்த்தி செய்யப்பட்டன. வடிகாலங்களில் ஏற்பட்டிருந்த தடைகள் அகற்றப்பட்டு, வெள்ள நீரோட்டம் சீரமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள், கல்முனை மாநகர ஆணையாளர் நேரடியாக கண்காணித்த நிலையில், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜெளசி, உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் உள்ளிட்ட பலர் குழுவாக செயல்பட்டனர்.
மக்களை பாதுகாக்கவும், வெள்ள அனர்த்தங்களை தடுக்கவும் இரவு பகலாக பணியாற்றிய ஊழியர்களுக்கு மாநகர ஆணையாளர் நௌபீஸ் நன்றியையும் பாராட்டுகளையும்
தெரிவித்தார்.
(Tamian)