Breaking News

மட்டக்களப்பில் குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு: ஆயிரக்கணக்கான மக்களுக்கு பாதிப்பு





மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முக்கிய குளங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக மாவட்ட நீர்ப்பாசன அலுவலகம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கட்டுமுறிவு குளத்தில் 12 அடி, உறுகாமம் குளத்தில் 17.9 அடி, வெலிக்காக் கண்டிய குளத்தில் 17.11 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் வான்கதவுகள் திறக்கப்பட்டு, கூடுதல் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல், உன்னிச்சைக் குளத்தில் 30 அடி, வாகனேரி குளத்தில் 18.3 அடி, வடமுனைக்குளத்தில் 13.6 அடி, புணானை அணைக்கட்டு 8.3 அடி, நவகிரிக் குளத்தில் 30.5 அடி மற்றும் கித்துல் குளத்தில் 4 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மழைநீர் தாழ்வான பிரதேசங்களில் தேங்கியுள்ளதுடன், வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் ஆயிரத்திற்கும் மேலான மக்கள் அசௌகரியங்களை அனுபவிக்கின்றனர். அவர்களின் அன்றாட நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த அவசரநிலைக்கு ஆதரவாக, தாழ்நில பகுதிகளுக்கான படகு சேவைகள் இன்று (26) தொடங்கி செயல்படுத்த