Breaking News

உள்ளூராட்சி தேர்தல் அடுத்த வருடம் – அமைச்சர் விஜித ஹேரத்



அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.



இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி எதிர்வரும் காலங்களில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.



அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்: 



இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேர்தலில் பங்குபற்றிய வேட்பாளர்களில் சிலர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.



புதிய வேட்பாளர்கள் விண்ணப்பிப்பது குறித்து மற்ற அரசியல் கட்சிகளுடன் ஆலோசிப்பதாகவும், தேர்தல் திகதி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.