Breaking News

பிரதமர் ஹரிணி அமரசூரியாவின் கையால் கௌரவிக்கப்பட்ட காத்தான்குடி மெத்தைப்பள்ளி மாணவனின் வெற்றி



காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் மாணவரும் சிரேஷ்ட மாணவத் தலைவருமான MHM. ஹகீல், அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட வரைபடங்கள் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டு பாடசாலையின் பெயரையும் பெருமையையும் உயர்த்தியுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான இப்போட்டித் தொடரை கல்வி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, சுகாதார அமைச்சு, தேசிய அபாயகரமான மருந்து கட்டுப்பாட்டு சபை, கொழும்பு திட்டம் மற்றும் டயலொக் ஆக்சியாடா ஆகியவை இணைந்து நடத்தியன.

பரிசளிப்பு வைபவம் 2024 நவம்பர் 29 ஆம் திகதி, கொழும்பில் உள்ள கடற்படை தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் கெளரவ கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களால் ஹகீலுக்கு பெறுமதியான சான்றிதழும், ரூபாய் 20,000 யிற்கான காசோலையும் வழங்கப்பட்டன.

இவ் சாதனையை அடைய உதவிய MSF. ஷீனா ஆசிரியர் மற்றும் மற்ற ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் பாராட்டத்தக்கது. பாடசாலை நிருவாகம், பழைய மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர் சமூகத்தினரும் இந்த வெற்றிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

- பாடசாலை நிருவாகம்