"லாஃப் எரிவாயு தட்டுப்பாடு முடிவு: விநியோகம் இன்று தொடக்கம்"
பல மாதங்களாக நீடித்த லாஃப் எரிவாயு தட்டுப்பாடு தற்போது தீர்ந்துள்ளதாக லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது. எரிவாயு பற்றாக்குறையின் காரணமாக நுகர்வோர் அவதியடைந்துள்ளனர். வளைகுடா போர் சூழல் காரணமாக எரிவாயு ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நேற்று (24) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிவாயு சரக்குக் கப்பல் வந்தடைந்ததும், இன்று (25) விநியோக நடவடிக்கைகள் தொடங்கவுள்ளதாக லாஃப் கேஸ் நிறுவனத் தலைவர் டபிள்யூ.கே. வேகபிடிய தெரிவித்தார்.
இதன் பிறகு, எரிவாயு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளூர் சந்தைக்கு தொடர்ந்து எரிவாயு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, வர்த்தமானி அறிவித்தலின் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.