ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் உட்கட்சி கருத்து மோதல்: முன்னாள் எம்.பி. ஹரீஸ் இடைநிறுத்தம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வழங்கியிருக்கிறார். இந்த நடவடிக்கை, ஹரீஸ் பொதுவெளியில் கட்சியையும், கட்சித் தலைவரையும் விமர்சித்ததற்கான எதிர்வினையாக எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த இடைநிறுத்தம் தொடர்பாக நியாயமான காரணங்களை முன்வைக்குமாறு ஹரீஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.