Breaking News

தன்னை தேசிய பட்டியல் மூலம் நியமிக்காவிட்டால் தற்கொலை செய்வேன் – துஷார இந்துனில் அமரசேன




ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன, தன்னை தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு நியமிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

தேசியப் பட்டியல் தொடர்பான கலந்துரையாடல் இன்று (26) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவரது கருத்து:
“நான் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் 40,000 க்கும் அதிகமான விருப்ப வாக்குகளைப் பெற்றேன். எனவே என்னை தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க வேண்டும்.

நான் ஏற்கனவே கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பேசியுள்ளேன். அவர் எனது கோரிக்கைக்கு செவிசாய்ப்பார் என நம்புகிறேன். எனினும், என்னை பாராளுமன்றத்திற்கு நியமிக்காவிட்டால், எனது வாழ்க்கையை முடித்துக் கொள்வேன்.”

துஷார இந்துனில் அமரசேனையின் இச்சொல்லாக்கள் அரசியல் வளையத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.