Breaking News

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.



நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தோல் நோய் தொடர்பான விசேட வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” சருமத்தில் ஏதேனும் நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியமாகும். குறிப்பாக சருமத்தின் நிறத்தில் திடீரென மாற்றங்கள் ஏற்பட்டால் கிரீம் வகைளை பூசாமல் வைத்தியர் ஒருவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

சருமத்திற்கு நன்மை அளிக்கும் பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் உட்கொள்ள வேண்டும். திடீரென உடல் எடை அதிகரித்தால் வைத்தியரிடம் ஆலோசனை பெற்று ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாது தோலில் அரிப்பு, நிறம் மாற்றம், வெடிப்பு மற்றும் ஒவ்வாமை போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெறவேண்டும்.

அத்தோடு, பல்வேறு கிரீம் வகைகளைச் சருமத்தில் பயன்படுத்துவதனாலும் தோல் புற்றுநோய் ஏற்படலாம். எனவே வைத்தியரின் ஆலோசனை இன்றி சந்தையில் விற்பனை செய்யப்படும் புதிய கிரீம் வகைகளைப் பயன்படுத்த வேண்டாம் ” இவ்வாறு தோல் நோய் தொடர்பான விசேட வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.