வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு EAQ அமைப்பின் உதவி கரங்கள்
நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ள அனர்த்தத்தால் வீடுகள் மற்றும் தொழில் நிலையங்கள் பாதிக்கப்பட்டதுடன், பலரது அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது. குறிப்பாக வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இன்றைய தினம் (27/11/2024), EAQ அமைப்பு, ஏறாவூர் ஜம்மியத்துல் உலமா சபையின் வழிகாட்டுதலின் கீழ், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரண நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. முதல்கட்டமாக ரூ. 75,000/- ஜம்மியத்துல் உலமா தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளது.
EAQ அமைப்பின் அர்ப்பணிப்புடன் இந்த நிவாரண திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன.