மன்னார் வைத்தியசாலையில் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
வைத்தியர்கள், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், அண்மையில் வைத்தியசாலையில் ஏற்பட்ட அசம்பாவிதத்துக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாததை கண்டிக்கவும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், தற்போது மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, மக்கள் நலன் கருதி, தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், வைத்தியசாலையில் குழப்பம் உருவாக்கிய சில குழுக்களிடம் மேல் மட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
(அதென்ன)