Breaking News

"வெள்ளம் காரணமாக சிரமப்பட்ட மாணவிகளுக்கு நளீம் MP விசேட பேருந்து ஏற்பாடு!




வெள்ளம் காரணமாக போக்குவரத்து வசதிகள் இல்லாமல் சிரமப்பட்ட ஏறாவூரை சேர்ந்த தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் M.S. நளீம் MP அவர்களின் உதவியுடன் விசேட பேரூந்து மூலம் அழைத்து வரப்பட்டனர்.

சீரற்ற காலநிலையும், போக்குவரத்து ஏற்பாடுகளின் இன்மையும் காரணமாக, மாணவிகள் அவசரமாக வெளியேற வேண்டிய நிலையில் இருந்தனர். இந்த நிலையில், நளீம் MP அவர்கள், கொழும்பிலிருந்தும் உடனடியாக தனியார் பேருந்து ஒன்றை ஏற்பாடு செய்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்தார்.

அதிக மழை மற்றும் வெள்ளம் காரணமாக, மாணவிகள் மட்டக்களப்பில் நின்று ஏறாவூர் வரையில் கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறு அவசரமாக செய்யப்பட்ட ஏற்பாட்டுக்கு, மாணவிகளும் பெற்றோர்களும் நளீம் MP அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.